Latest News
Sunday, May 13, 2018

கோப்பி யுகம் - 1824 கம்பளை

1820 இற்கும் 1824 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இலங்கையில் முதலாவதாக கோப்பி பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. கண்டி மாவட்டத்திலுள்ள, கம்பளை நகரில் - சிங்ஹாபிட்டிய எனும் பகுதியிலேயே ஜோர்ஸ் பேர்ட் என்பவரால் கோப்பி பயிரிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஏனையப் பகுதிகளிலும் பயிரிடப்பட்டது. கோப்பி தோட்டங்களில் வேலை செய்வதற்காக 1827 ஆம் ஆண்டுமுதல் தென்னிந்தியாவிலிருந்து மக்கள் வர தொடங்கினர். 1954 ஆம் ஆண்டுவரை கோப்பியே பிரதான ஏற்றுமதி பொருளாக விளங்கியது.

எனினும், 1865 ஆம் ஆண்டு கோப்பி பயிர் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி, அழிவடைந்துவந்தது. அதன்பின்னரே 1867 களில் தேயிலை பயிர்செய்கையும், பின்னர் இறப்பர் பயிர்செய்கையும் ஆரம்பமாகின.
கோப்பி யுகம்தான் மலையக மக்களின் உழைப்பு வரலாற்றின் ஆரம்பமாகும். அந்த பயிர் செய்கை ஆரம்பமான இடத்துக்கு ‘பச்சை தங்கம்’ குழுவினர் சென்றிருந்தோம்.

கம்பளை, நகரிலிருந்து 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதியிலேயே சிங்ஹா பிட்டிய இருக்கின்றது. ஆரம்பகாலத்தில் கோப்பி வத்தை என்றே அது அழைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோப்பி பயிரிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அப்பகுதியே கட்டடகாடாக காட்சியளிக்கின்றது. ஓரிரு வீடுகளிலேயே கோப்பி மரம் இருக்கின்றது. ஏனைய பகுதிகளிளெல்லாம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நாம் வசிக்கும் இடம் வரலாற்றுடன் தொடர்புபட்ட ஊர் என்பது அங்குள்ள பலருக்கு தெரியவில்லை. இதனால், விகாராதிபதி ஊடாகவே சில தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.ஓரிரு வீடுகளில் அடையாளத்துக்காக கோப்பிவளர்க்கின்றனர்.

எழுத்து ஆர்.எஸ்.
-பச்சை தங்கம்-
#pachaithangam #malayagam #lk



  • Like us
  • Comments
Item Reviewed: கோப்பி யுகம் - 1824 கம்பளை Rating: 5 Reviewed By: pachai thangam