Latest News
Thursday, June 7, 2018

இரத்தினபுரியில் செத்துமடியும் தமிழ்க் கல்வி!

இரத்தினபுரியிலிருந்து கடந்த 70 வருடங்களில்
ஒரு தமிழ் மாணவரேனும் வைத்தியபீடம் தெரிவாகவில்லை

தேசிய பாடசாலை இன்மையால் அவலம் தொடர்கிறது
53 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம்?????

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இற்றைவரை இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து எந்தவொரு தமிழ் மாணவரும் பல்கலைக்கழகத்தில் வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவாகவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் தேசிய பாடசாலை இன்மையாலும் மாகாணசபைகளின்கீழ் இயங்கும் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுக்கூட வசதிகளும் இல்லாததன்காரணமாகவே அவ் அவலம் நீடிக்கின்றது என்று இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா இன்று ( 07) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பியிருந்த அவர், அமைச்சர் பதில் வழங்கிய பின்னரே மேற்படி தகவலை வெளியிட்டார்.

1. கேள்வி - இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை?

பதில் - 104.

2. கேள்வி – மேற்படி பாடசாலைகளில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளின் எண்ணிக்கை,?

பதில் - ஆரம்பநிலை பாடசாலைகள் - 42
      இரண்டாம்நிலை பாடசாலைகள் - 62

3. கேள்வி - மத்திய அரசுக்குரிய பாடசாலைகளின் எண்ணிக்கை?
பதில் - 01 – (முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம்)

4. கேள்வி - தமிழ்மொழிமூலம் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை?
பதில் - 53, 269.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ்மொழிமூலம் கல்வி பயிலும் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

இரத்தினபுரியிலுள்ள மாணவர்கள் ஹட்னம், நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்று விஞ்ஞானம் பயின்றாலும் - சொந்த மாவட்டத்திலிருந்து தெரிகா முடியாத சூழ்நிலை. தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து வந்து பயில்பவர்களுக்கு நுவரெலியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பச்சை தங்கம்
  • Like us
  • Comments
Item Reviewed: இரத்தினபுரியில் செத்துமடியும் தமிழ்க் கல்வி! Rating: 5 Reviewed By: pachai thangam