Latest News
Saturday, April 21, 2018

எலிசபத் மகாராணியின் கண்டி பயணம் -1954


பாரத நாட்டிலிருந்து எம்மக்களை இலங்கைத்தீவு நோக்கி கைக்கூலிகளாக அழைத்துவந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். எவ்வித மறுப்புமின்றி அனுப்பிவைத்தது இந்திய தேசம். பிறந்த மண்ணில்தான் வாழவழியில்லை. எனவே, குடியேறிய நாட்டிலாவது கொடிகட்டிபறக்க வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைத்தனர் எம்மவர்கள்.

காடுகளை வளமாக்கினர். நாட்டை செழிப்பாக்கினர். ஆனாலும், திரும்பும் திசையெல்லாம் சோகங்களே எம்மை துரத்திவந்தன. வறுமையே சொத்தாக மாறியது. துன்பம்தாங்காது சிலர் வெளியேறினர். ஏனையோர் உழைத்து களைத்தே மாண்டனர். அந்த கொடிய - துயர்மிக்க வரலாற்றை எடுத்துரைக்க வெறும் வார்த்தைகள் மட்டும்போதா.

தன் ஊழைப்பு சுரண்டப்படுகின்றது என தெரிந்தும் தேனி தேன் சேகரிக்கும். அதுபோலவே எம்மக்களும் வாழ்ந்தனர். வெள்ளையர்கள் உழைப்பை சுரண்டினர். அண்டைநாடும்
கண்டுகொள்ளவே இல்லை.
இந்தியா, பிரிட்டிஷ் ஆகிய நாடுகள் தமது பாதீட்டில் இலங்கைக்கு நிதிகளை ஒதுக்கினாலும் மலையக மக்களுக்கென எந்தஒதுக்கீட்டையும் அள்ளிவழங்குவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
சரி அதைவிட்டுவிடுவோம். பிரிட்டிஷ் எலிசபத் மகாராணி 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் கடைசி தமிழ் மன்னன் ஆண்ட கண்டிக்கும் சென்றிருந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அந்த காணொளியே இணைக்கப்பட்டது.
இலங்கையில் 2014 ஆம் ஆண்டு பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடுநடைபெற்றபோது எலிசபெத் மகாராணியின் சார்பில் அவரது வாரிசுகள் பங்கேற்றிருந்தனர். மலையக பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஆவது பிறந்தநாளை முன்னிட்டே ராணி இலங்கை வந்திருந்தார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் மடல்களை ஆயிரக்கணக்கானவர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

- பச்சை தங்கம்-
  • Like us
  • Comments
Item Reviewed: எலிசபத் மகாராணியின் கண்டி பயணம் -1954 Rating: 5 Reviewed By: pachai thangam