Latest News
Wednesday, May 9, 2018

சிமி(னி)லி லாம்பு

சிமி(னி)லி லாம்பு 

இருள் நீங்கி எம்வாழ்வில் ஒளி இன்னும் பிறக்கவில்லை. இதற்கான பழியை விதிமீது சுமத்திவிட்டு ஓரளவு பெருமூச்சுவிட்டாலும், உண்மைக்காரணம் என்னவென்பதை ஒருமுறையாவது உங்கள் மனசாட்சியிடம் மெதுவாகவேனும் கேட்டுப்பாருங்கள் மக்களே!

சிமினி லாம்பு தொடர்பில் சிந்தித்துக்கொண்டிருக்கையில்தான் கும்மிருட்டும் விழித்திரை முன்னாள் வந்தது.  “ அந்தகாலத்து இருளை” மறக்கமுடியுமா என்ன?

ஆம். அதிகாலையில் உதயமாகும் ஆதவன், மாலைவேளையில் தலைமறைவாகத்தொடங்குவான். அதன்பின்னர் காரிருள் தலைதூக்கும். மதியவள் இருப்பதால் ஒரளவு ஒளி நிவாரணம் கிடைத்தாலும் இருளை சமாளிக்க சிமினி லாம்பே எமக்கு பக்கபலமாக இருந்தது.

18 ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும்        தோட்டப்பகுதிகளில் மின்சாரவசதி இருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகே மின்சாரம் வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டது.     எனினும்,     சிலதோட்டங்கள    ; இன்னும் மின்ஒளிக்காக ஏங்கிநிற்கின்றன என்பதும் கசப்பான உண்மையாகும்.

மின்சாரம் இல்லாத காலப்பகுதியில் சிமினி லாம்பு, குப்பி லாம்பு, லந்தர் ஆகியனவே வெளிச்சம்தரும் தேவதைகளாக எம்கண்முன் காட்சிதந்தன. பிரதான அறையில் சிமினி லாம்பும் ( இதை சிமிலி லாம்பு என்றும் சொல்வார்கள்) சமயலறையில் கும்பிலாம்பும் வைக்கப்பட்டிருக்கும்.

சிமினி  லாம்பின், சிமினியை (மெல்லிய கண்ணாடிப்பகுதியை) நாள்தோறும் கழுவவேண்டும்
பந்தம்
. விளக்குத்திரி கக்கிய புகை அதை கறுப்பாக்கிடும். வீட்டில் பெண் பிள்ளைகள் இருப்பார்களாயின், மூத்தவளிடமே அதற்கான பொறுப்பு கையளிக்கப்படும்.

மாலை 3 மணியளவிலேயே சிமினி கழுவப்படும்- விளக்கப்படும். கை வெட்டுப்படாமல், சிமினி உடையாமலேயே அந்தப்பணியை செய்யவேண்டும். கிட்டத்தட்ட இதுகூட ஒரு அக்கினிப்பரீட்சையாகவே இருக்கும். தவறுதலாக கண்ணாடி வலயம் , கழுவும்போதோ அல்லது துடைக்கும்போதே உடைந்துவிட்டால் அம்மாவின் கை கண்ணங்களை பதம்பார்த்துவிடும். (பளார்...பளார்...)


சிமினிலாம்பு உடைந்துவிட்டால் அதைவந்து அம்மாவிடம் சொல்வதற்கு மகள் தடுமாறும் காட்சி இருக்கின்றதே, ஹா...ஹா...எத்தனை தடுமாற்றம், எத்தனை பதற்றம். அதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லிவிடமுடியாது. ஒருபுறத்தில் ஐயோ, இன்று இரவு வீடு இருளில் மூழ்கிவிடுமே என்ற கவலை. மறுபுறத்தில் அம்மா அடிக்கப்போகிறாளே என்ற அச்சமும் சூழ்ந்து, அவளை தற்காலிக ஊடையாக்கிவிடும்.
0
சிமினிலாம்பின் கீழ்பகுதி தடித்த கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கும். மண்ணெண்ணெய் நிரம்பியிருக்கும் ஒரு மினி டேங்காகவே அது காட்சிதரும்.

மண்ணெண்ணெய் கீழ் சிந்தாமல், திரியை சரிபார்த்து சிமினிலாம்பை பத்தவைப்பதற்குள் அதற்கான பொறுப்பை ஏற்றிருப்பவர் படாதபாடு பட்டுவிடுவார் என்றே கூறவேண்டும். திரி முடிந்துவிட்டால், மாற்றுவழியாக துணியை திரியாக்கும் தந்திரம்கூட ஒரு அற்புதகலையென்றெ என்மனம் சொல்கின்றது.
லந்தர்


சிலவேளை, சிறியளவில் வெடிப்புகள் ஏற்பட்டால் சேலோடெப் (ளநடடழவயிந ) போட்டு பாவிக்கப்படும். சிலவீடுகளில் பேப்பர்கூட ஒட்டப்பட்டிருக்கும். வறுமையின் கோரதாண்டபத்தை அது தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி சிமினிலாம்புக்கென ஒரு தனிக்கதையே இருக்கின்றது.

தோட்டப்பகுதிகளில் மாலைநேர வகுப்பு நடக்கும். வயதெல்லை இருக்காது. தோட்டத்திலுள்ள படித்த நபரொருவர் வாத்தியாராக இருப்பார். ஒன்று அல்லது இரண்டு சிமினி லாம்புகளுடன் வகுப்புகள் நடக்கும். லாம்பு வெடித்தால் அல்லது உடைந்தால் வகுப்பு நடக்காது.

ஜேம்போத்தலில்கூட லாம்பு தயாரித்துள்ளோம். தூர இடங்களுக்கு செல்வதாக இருந்தாலம் பந்தம் பாவிக்கப்படும். அதுகூட எமது தயாரிப்புதான். தேங்காய் தும்பு, போத்தல், சாம்பல் ஆகியவற்றைகொண்டு தயாரித்துவிடுவோம். அது பற்றிய பார்வையை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம். தோட்டத்தில் காவல் பார்ப்பதற்கும் பந்தமே பயன்படுத்தப்படும்.
\
இன்று உலகம் வளர்ச்சிகண்டுவிட்டது. பலவிதமான மின்விளங்குகள் விழிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளன. சில தோட்டங்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அன்று சிமினி லாம்பில் படித்து பலர் முன்னேறினர். இன்று வசதியிருந்தும் கல்வியில் சற்று வீழ்சியேற்பட்டுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்.
சிமிலி லாம்பு தொடர்பில் உங்கள் கருத்துகளையும் முன்வையுங்கள்.

எழுத்து ஆர்.எஸ். பிறை

  • Like us
  • Comments
Item Reviewed: சிமி(னி)லி லாம்பு Rating: 5 Reviewed By: pachai thangam