அடக்குமுறைக்கு எதிரான லெட்சுமி தோட்ட போராட்டம் - 1961
வீரச்சாவடைந்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன்!
( மலையக தியாகிகள் பட்டியல் இணைப்பு)
வீரச்சாவடைந்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன்!
( மலையக தியாகிகள் பட்டியல் இணைப்பு)
மக்களை அடக்கியாள்வதென்பது ஜனநாயக விரோதச்செயலாகும். தனக்குரிய, கலை, கலாசாரங்களை பின்பற்றி – நாட்டுக்குரிய சட்டங்களைமீறாத வகையில் எப்படியும் வாழ்வதற்குரிய உரிமை மனிதனுக்கு இருக்கின்றது. இவை மறுக்கப்படுமானால் - உரிமைகளுக்காக போராடுவதைத்தவிர வேறுவழியில்லை.
இப்படிதான் 1960 களில் நாவலப்பிட்டிய – லெட்சுமி தோட்டத்தில் அடக்குமுறைகள் தலைவிரித்தாடின. ஹாலி என்ற பறங்கியரே தோட்டத்துக்கு சொந்நக்காரராக இருந்தார். தொழிலாளர்களுக்குரிய சட்டத்திட்டங்களை பின்பற்றாது - கட்டப்பஞ்ஞாயத்து நடத்திவந்தார். பாலாவின் பரதேசி படத்தில்வரும் காட்சிகளை ஒருமுறை நினைவுபடுத்தி பாருங்கள்.
தோட்டத்தில் எந்தவொரு நிகழ்வையும் தொழிலாளர்கள் தமது விரும்பத்துக்கேற்ப செய்யமுடியாது. இறைவழிபாடுகூட ஹாலியின் கட்டளையின்பிரகாரமே நடக்கவேண்டும். இவை மட்டுமல்ல மேலும் பல கொடூரங்கள் அரங்கேறின. அவற்றை வெளிப்படையாக சொல்லமுடியாது.
அடக்கியாளும் முறை உச்சம் தொட்டதால், உரிமைக்காக போராவேண்டும் என்ற சிந்தனை மக்களுக்குள் மலர்ந்தது. இதற்காக தொழிற்சங்க உதவியை பெறுவதற்கு உத்தேசித்தனர். ஆனால், தொழிற்சங்கங்களில், தொழிலாளர்கள் இணைவதை அவர் விரும்பவில்லை. வெளித்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்வதற்கு கதவடைப்பு செய்தான்.
இருந்தும், உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் துணிந்து தொழிற்சங்கத்தில் இணைந்தனர் தொழிலாளர்கள் சிறந்த கட்டமைப்பொன்றையும் உருவாக்கினர். அந்த காலத்தில் சந்தாப்பணம் அறவிடப்படாது என்பதால் தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட விடயம் ஹாலிக்கு தெரியவரவில்லை. ஏப்படியோ தெரியவர, கடும் சீற்றம்கொண்ட அவர், மக்களை மேலும் வதைக்க ஆரம்பித்தான்.
தோட்டதுரையின் பங்களாவைசூழ பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பலவழிகளில் தொழிலாளர்கள் சீண்டி பார்க்கப்பட்டனர். இவையொன்றுக்கும் அவர்கள் மசியவில்லை. இதனால், உரிமையாளர் கடும் கோபம் கொண்டார். காடையர்கள் சிலரையும், பொலிஸாராiயும் வளைத்துப்போட்டார்.
1961 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி. ஞாயிற்றுக்கிழமையென்பதால் தொழிலாளர்கள் வீடுகளில் அமைதியாக இருந்தனர். அவ்வேளையில் படையெடுத்து சென்றனர் பொலிஸார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது என தெரிந்தும் தொழிலாளர்கள் வெளியில் வந்தனர். பொலிஸார் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
துப்பாக்கி பிரயோகத்தால் நான்கு தொழிலாளர்கள் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் துறந்து – தியாக வரலாற்றில் இணைந்தனர். ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோரே இவ்வாறு வீரச்சாவடைந்தனர்.
சம்பவத்தை மறைப்பதற்கு எவ்வளவு முயற்சித்தாலும், அருகிலுள்ள தோட்டங்களுக்கு அது காட்டுத்தீயாக பரவியது. தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடினர். தோழிற்சங்க தலைவர்களும் தோட்டத்துக்கு வந்தனர். விசாரணை கோரினர்.
விசேட விசாரணை ஆரம்பமாகியது. தோட்ட மக்களுக்காக ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.
எனினும், தோட்ட மக்கள் பொலிஸாரையும், துரையையும் தாக்க முற்பட்டதாலேயே இச்சபவம் நடந்தது என முதலாளிமார் சார்பில் கதைஜோடிக்கப்பட்டது. ஹாலியின் பக்கமே நீதியும் திரும்பியது.
விசேட விசாரணை ஆரம்பமாகியது. தோட்ட மக்களுக்காக ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.
எனினும், தோட்ட மக்கள் பொலிஸாரையும், துரையையும் தாக்க முற்பட்டதாலேயே இச்சபவம் நடந்தது என முதலாளிமார் சார்பில் கதைஜோடிக்கப்பட்டது. ஹாலியின் பக்கமே நீதியும் திரும்பியது.
மலையக தியாகிகள் பட்டியல்
1. கோவிந்தன் -
முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939.
முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939.
2. வேலாயுதம் - கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942.
3. வேலுசாமி - கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19
வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950.
வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950.
4. எட்லின் நோனா - என்கலவல தோட்டம், தெபுவான. 1953,
5. ஆதியப்பன்- மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953,
6. வேதன்- லின்டல் தோட்டம், நேபொட. 1957,
வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957
வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957
7.நடேசன் வெறேயர்- தோட்டம், இரத்தினபுரி. 1957,
8.- ஏப்ரஹாம் சிங்கோ- ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958,
9. ஐயாவு- பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958,
10. பிரான்சிஸ் - பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958.
11. கொம்பாண்டி - சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958.
12. பொன்னையா - சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958.
13.கருமலை- நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959,
14.முத்துசாமி, காலகார- மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959,
15.ஜேம்ஸ் சில்வா- கமாவளை தோட்டம், பசறை. 1959,
16.தங்கவேல்- முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959,
17. சிதம்பரம் - மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960,
18. முனியாண்டி- வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960,
19. செல்லையா- லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
20. ஆராயி- லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
21. மாரியப்பன்- லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
22. நடேசன்- லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
23.விஜயசேன- எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961.
24. சோலை- சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961,
25. அழகன்- கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969,
26.ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம்- எல்கடுவ. 1969,
27. இராமையா- சீனாக்கள தோட்டம், பதுளை. 1970,
28. அழகர் சாமி - சீனாக்கல தோட்டம், பதுளை. 1970.
29. கந்தையா நாலந்த தோட்டம்- மாத்தளை. 1970,
30. பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
31.ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
32. இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
33. லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 1977.
34. பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.
எழுத்து – ஆர்.எஸ்.பிறை
மூலம் - உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்ததியாகிகள் . எழுத்தாளர் மாத்தளை ரோஹினி.
நன்றி- நமது மலையகம். ( கே.பி.பி. புஸ்பராஜா என்பவர் தினகரனில் எழுதியிருந்த ஆக்கத்தை, நமது மலையகம் பிரசுரித்திருந்தது. அதிலிருந்தே தியாகிகள் பட்டியல் எடுக்கப்பட்டது.)
முல்லோயா கோவிந்தன், முத்துசாமி பற்றி பச்சை தங்கம் எழுதியுள்ளது. ஏனையவர்கள் பற்றியும் எழுதப்படும்.