செருப்புகூட இன்றி வேவண்டன் தோட்டம்வந்து
கடின உழைப்பால் முதலாளியான கருப்பையா
கடின உழைப்பால் முதலாளியான கருப்பையா
வேவண்டன் பங்களா |
தன்நம்பிக்கையும், கடின உழைப்புமே மனிதவாழ்வின் முன்னேற்றத்துக்கான துவக்கபுள்ளியாக கருதப்படுகின்றது. இறம்பொடை, வௌண்டன் தோட்டத்துக்கு சப்பாத்துகூட இன்றிசென்ற அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் தந்தையான கருப்பையா பிள்ளை, அந்த தோட்டத்துக்கே முதலாளியான கதை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
மனித வாழ்வில் யாருக்குதான் துன்பகாலம் இல்லை. இப்படிதான் தமிழகத்தில் சர்வ வசதிகளுடனும் வாழ்ந்த கருப்பையா பிள்ளைக்கும் வாழ்வில் பொருளாதார ரீதியில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால், தொழிலுக்காக அவரும் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.
கம்பளை, இரட்டைப்பாதை என சில இடங்களில் அவர் தொழில்புரிந்தாலும் ஒரு கட்டத்தில் வேலைதேடி திண்டாடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒரு புறத்தில் வறுமையும், மறுபுறத்தில் வேலையிண்மையும் அவரை வாட்டி வதைத்துவிட்டன என்றே கூறவேண்டும்.
கருப்பையாபிள்ளை
|
பெரும் சிரமங்களுக்கு மத்தியில் 1890 ஆம் ஆண்டு வௌண்டன் தோட்டத்தில் கங்காணி வேலை அவருக்கு கிடைத்தது. செருப்புகூட இன்றியே அந்த தோட்டத்துக்குள் காலடியெடுத்து வைத்தார். கடுமையாக உழைத்தார். செல்வத்தின் உச்சத்தையும் தொட்டார்.
எந்ததோட்டத்துக்கு செருப்புஇன்றி சென்றாரோ அதே தோட்டத்துக்கு 1909 ஆம் ஆண்டில் சொந்த மோட்டார் காரில் முதலாளியாக சென்றார்.
வேவண்டன் தோட்டத்தையும் விலைகொடுத்துவாங்கினார். புரட்டொப் தோட்டத்தின் மலைஉச்சிவரை அந்த தோட்டம் இருக்கின்றது. முதலில் தேயிலை பயிர்இடப்பட்ட இடங்களில் அதுவும் ஒன்று. இன்று தொண்டமான்களின் கோட்டையாக திகழ்கின்றது.
சௌமியமூர்த்தி தொண்டமானின் மகனான ராமநாதன் மற்றும் பேரன் ஆறுமுகன் தொண்டமான் |
-பச்சை தங்கம்-