Latest News
Monday, April 30, 2018

நீதிமன்ற ஆவணங்கள் தீயிட்டு அழிப்பு: பண்டாரவளையில் அட்டூழியம்!


பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்ற வழக்கு ஆவண பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள்களஞ்சியப்படுத்தும்அறையின் ஒருபகுதி தீக்கிரையாகியுள்ள சம்பவம், இன்று (30-04-2018ல்) முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


வழக்கு ஆவண பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் களஞ்சியப்படுத்தும் அறையில் திடீரென ஏற்பட்டதீயினால் முக்கியவழக்குகள் பலவற்றின் கோவைகள் மற்றும் ஆவணங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பண்டாரவளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிசார் பண்டாரவளைதீயணைப்புபிரிவினருடன் இணைந்து, தீமேலும் பரவாதவகையில் தடுத்துள்ளனர். மேற்படி களஞ்சிய அறையன்னல் கதவு உடைந்திருப்பதால், விஷமிகளின் செயலாலேயே, தீஏற்பட்டிருக்கக் கூடுமென்று, பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.


இத்தீஏற்பட்டமைதொடர்பாக,பண்டாரவளைப் பொலிசாரும், மின்சாரபிரிவினரும்தனித்தனியானவிசாரணைகளையும்புலனாய்வுகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

பதுளை- செல்வராஜா

  • Like us
  • Comments
Item Reviewed: நீதிமன்ற ஆவணங்கள் தீயிட்டு அழிப்பு: பண்டாரவளையில் அட்டூழியம்! Rating: 5 Reviewed By: pachai thangam