காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சிதந்த பூமியை எழில்கொஞ்சும் மலைநாடாக மாற்றினர் எம் மக்கள். மண்ணை வளமாக்கியதுடன், அதே மண்ணில் செந்துமடிந்து தேயிலைச்செடிக்கு உரமுமாகினர். இலங்கையின் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாக திகழ்ந்தனர்.
தென்னிந்தியாவிலிருந்து கைக்கூலிகமாக அன்று அழைத்துவரப்பட்ட எம்மவர்களுக்கு ஆட்சேர்ப்பு படிவமொன்று வழங்கப்பட்டது. அது படிவம் என்பதைவிட ‘முக்கிய அறிவிப்பு’ பகுதியிலுள்ள அறிவித்தலை வாசிக்கையில் ‘ஆள்விற்பனை அட்டை’யென்றே கூறதோன்றுகின்றது.
1. அதிகவேலை செய்தால் அதிக கூலி சம்பாதிக்கலாம்.
2. சம்பளம் தோட்டத்து துரையவரால் மாதமாதம் கூலிகள் கையிலே கொடுக்கப்படும்.
3. வாடகையில்லாத வீடுகளும், மருந்தம், விறகும் கூலியாட்களுக:கு கொடுக்கப்படும்.
4. வேலைசெய்வதற்குரிய கூடை உள்ளிட்ட சாமான்கள் இனாமாகக் கொடுக்கப்படும்.
5. நல்ல அரசி குறைந்த விலையில் கூலியாட்களுக்கு வழங்கப்படும்.
முக்கிய அறிவிப்பு பகுதியில்.
சுயவிரும்பின்பேரிலேயே வேலைக்கு செல்கின்றனர். ஒப்ந்தம் எதுவும் இல்லை என்றெல்லாம் ‘கைவிரிப்பு’ வசனங்கள் உள்ளன.
(படிவத்தை வழங்கியவர் தோழர். ப. கனேகேஸ்வரன் ஜே.ஜி. ) நீங்களும் எம்முடன் கைகோர்க்கலாம்.
(படிவத்தை வழங்கியவர் தோழர். ப. கனேகேஸ்வரன் ஜே.ஜி. ) நீங்களும் எம்முடன் கைகோர்க்கலாம்.