Latest News
Monday, April 30, 2018

சிவன் மலைக்கான யாத்திரை நிறைவு

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் 29.04.2018 அன்றுடன் நிறைவு பெற்றது.
இதனையடுத்து, மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜை பொருட்கள் புனித விக்கிரங்களை இரத்தினபுரி, பெல்மதுளை ரஜமஹா விகாரைக்கு வாகன தொடரணியாக 30.04.2018 அன்று எடுத்து செல்லப்பட்டது
லக்ஷபான வழியாக கிதுல்கலை, யட்டியாந்தோட்டை, கரவனல்ல, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமகா விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ம் திகதி பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமன சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமைபோன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் யாத்திரையை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

க. கிஷாந்தன்
  • Like us
  • Comments
Item Reviewed: சிவன் மலைக்கான யாத்திரை நிறைவு Rating: 5 Reviewed By: pachai thangam