இலங்கையில் 1820 ஆம் ஆண்டுமுதலே கோப்பியுகம் ஆரம்பமாகியது. எனினும், 1827 ஆம் ஆண்டிலிருந்தே தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். முதலாவது தொழிலாளரின் வருகையும் அந்த ஆண்டிலேயே பதிவாகியது.
1865 ஆம் ஆண்டு கோப்பி பயிர்செய்கை செத்துமடிய தொடங்கியது. அதன்பின்னரே 1867 ஆம் ஆண்டுமுதல் தேயிலை பயிர்செய்கை ஆரம்பமானது.கோப்பியுகம் ஆரம்பமானதிலிருந்தே எம்மவர்கள் இங்குவரத்தொடங்கினர். இதன்படி 1839 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டுவரை இலங்கை வந்த மலையகத் தமிழர்களின் விபரத்தை அறிவோம்.
1. 1839 – 2,719 பேர்.
ஆண்கள் - 2,432
பெண்கள்- 188
குழந்தைகள்- 99
2. 1840 – 3,814 பேர்.
ஆண்கள் - 3,326
பெண்கள்- 307
3. 1841 – 5,050 பேர்.
ஆண்கள் - 4,523
பெண்கள்- 363
குழந்தைகள்- 164
4. 1842 – 9,470 பேர்.
ஆண்கள் - 9,025
பெண்கள்- 279
குழந்தைகள்-166
5. 1843 – 6,708 பேர்.
ஆண்கள் - 6,298
பெண்கள்- 162
குழந்தைகள்- 248
6. 1844 – 76,745 பேர்.
ஆண்கள் - 74,840
பெண்கள்- 1,181
7. 1845 – 73,401 பேர்.
ஆண்கள் - 72,256
பெண்கள்- 698
குழந்தைகள்- 177
8. 1846 – 42,318 பேர்.
ஆண்கள் - 41,863
பெண்கள்- 330
குழந்தைகள்- 125
மூலம் - 1847 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 திகதியிலான ஆளுநர் பதிவேடு.
( அன்று ஆளுநர்களே , ஆட்சிக்கு பொறுப்பாக இருந்தனர்.
நன்றி - மலையக தமிழர் வரலாறு.
படங்கள் - இணையம்
( இலக்கிய வித்தகராக கருதப்படும் எமது சாரல் நாடன் மலையகம் தொடர்பில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் இதில் குறிப்பாக ' மலையக தமிழர் வரலாறு' என்ற நூலை நாம் அனைவரும் படித்தாகவேண்டும். 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி சாமிமலையில் பிறந்த நல்லையா, சாரல் நாடன் எனும் பெயரிலேயே இலக்கியங்களைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
- பச்சை தங்கம்-