தொண்டமானை தோற்கடிக்க அஸீஸ்! -1942
சி.வி. வேலுபிள்ளைக்கு சார்பாக பிரசாரம்!!
மலையக தொழிற்சங்க வரலாறு தொடர்பில் ஏதேனும் பேசுகையில் - எழுதுகையில் என்றுமே மறக்கமுடியாத நபராக அமரர். அப்துல் அஸீஸ் திகழ்கின்றார்.
இந்தியாவில் பிறந்த இவர் முஸ்லிமாக இருந்தபோதும், தோட்டத்தொழிலாளர்களுக்காக உடலில் இறுதிமூச்சு இருக்கும்வரை தளராது – துணிவோடு குரல்கொடுத்தவர்.
1939 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானபோது அதன் ஸ்தாபக பொதுச்செயலாளராக தெரிவான இவர், அதன் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.
இலங்கை, இந்திய காங்கிரஸின் இரண்டாவது மாநாடும், இலங்கை - இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் முதலாவது மாநாடும் 1942 இல் கண்டியில் நடைபெற்றது. இதன்போது இரு அமைப்புகளுக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் பதவிக்கு அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானும், அஸிஸ{ம் போட்டியிட்டனர். வாக்கெடுப்பின்மூலமே தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். அஸீஸ{க்கு ஆதரவாக 31 பேரும், தொண்டமானுக்கு ஆதரவாக 19 பேரும் வாக்களித்தனர். இதன்படி மேலதிக 12 வாக்குகளால் அஸீஸ் தலைவரானார்.
வாக்கெடுப்பு முடிவு தொண்டமானுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. அன்றிலிருந்தே இருவருக்குமிடையில் முரண்பாடுகள் வெடிக்க ஆரம்பித்தன.
1954 ஆம் ஆண்டு அட்டனில் நடைபெற்ற இலங்கை, இந்திய காங்கிரஸின் மாநாட்டின்போதுதான் முரண்பாடு சந்திக்கு வந்தது. தலைவராக இருந்த அஸீஸ், இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சி.வி. வேலுபிள்ளையை ஆதரித்தார். குமாரவேலுவுக்கு சார்பான தொண்டமான் அணி பிரசாரம் செய்தது.
ஒருகட்டத்தில் கட்சி – தொழிற்சங்கத்துக்குள் அஸீஸின் கையோ ஓங்கியிருந்தது. பின்னர் முரண்பாடு காரணமாக வெளியேறினார் அஸீஸ். இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தையும் உருவாக்கினார். இ.தொ.காவுக்கு ஒரு காலத்தில் சிம்மசொப்பனமாக அவ்வமைப்பு விளங்கினாலும், இன்று பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
தொண்டமான் அணியிலிருந்த அமரர். வெள்ளையனும் கொள்கைரீதியிலான முரண்பாடு காரணமாக பிரிந்துசென்று, தொழிலாளர் தேசிய சங்கத்தை அமைத்தார்.
( 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்வாகசபைத் தேர்தல் முடிவை வெளிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கமாகவிருந்தது. எனவே, இனிவரும் நாட்களில் அஸீஸ், வேலுபிள்ளை, வெள்ளையன் ஆகியோரின் வரலாறுகள் தனியே தொகுத்து ‘பச்சை தங்கம்’ வழங்கவுள்ளது.
( அஸீஸின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ‘மனிதருள் மாணிக்கம் அப்துல் அஸீஸ் எனும் நூலில், அவரின் தொழிற்சங்க நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பி.எம். லிங்கம் என்பவரே அதை எழுதியுள்ளார்.)
http://www.pachaithangam.com/2018/05/1939.html
பச்சை தங்கம்

இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தனவுடன், அஸீஸ் |

#pachaithangam #malayagam #lk