Latest News
Sunday, May 20, 2018

இயற்கை அனர்த்தங்களால் 4 ஆண்டுகளில் 837 பேர் பலி! 352 பேர் மாயம்!


மலையகத்துக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 837 பேர் உயிரிழந்துள்ளனர். 793 பேர் காணமடைந்துள்ளனர். அத்துடன், 352 பேர் காணாமல்போயுள்ளனர்.


10 ஆயிரத்து 370 வீடுகள் முழுமையாகவும், 90 ஆயிரத்து 40 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழை, வெள்ளம், மண்சரிவு, சூறாவளி ஆகியவற்றாலேயே மேற்படி அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. மலையகத்தை பெரும்பாலும் மண்சரிவு அபாயமே அச்சுறுத்துவருகின்றது. மீரியபெத்த  பேரனர்த்தம், புலாத்சிங்கள அனர்த்தமென மண்சரிவால் பலர் உயிரிழந்தனர்.

நாட்டில் தற்போதும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மலையக மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.

எனவே, இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் மக்கள் வழிப்பாகவே இருக்கவேண்டும். பிராந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையங்களால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களின்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அலட்சியமானது ஆபத்தையே விளைவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேவேளை, 2017 ஆம் ஆண்டு 12 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியது. இதனால், இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.



  • Like us
  • Comments
Item Reviewed: இயற்கை அனர்த்தங்களால் 4 ஆண்டுகளில் 837 பேர் பலி! 352 பேர் மாயம்! Rating: 5 Reviewed By: pachai thangam