இலங்கையில் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டிருந்தாலும் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியே நடைபெற்றது.
1982 செப்டம்பர் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் 11 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன்படி 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஜே.ஆர். ஜயவர்தன – யானை சின்னம்.
(ஐக்கிய தேசியக்கட்சி)
H.S.R.B.கொப்பேகடுவ – கை
(ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
ரோஹண விஜேவீர – மணி
(மக்கள் விடுதலை முன்னணி)
ஜீ.ஜீ.பொன்னம்பலம் – சைக்கிள்
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)
கொல்வின் ஆ.டி. சில்வா- சாவி
(லங்கா சமசமாஜக் கட்சி)
வாசுதேவ நாணயக்கார – குடை
(நவசமசமாஜக் கட்சி)
வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 6985.
வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை.
1.ஜே.ஆர். ஜயவர்தன – 34,50,811 (52.91%)
2.H.S.R.B.கொப்பேகடுவ-25,48,438
3.ரோஹண விஜேவீர -2,73,428
4.ஜீ.ஜீ.பொன்னம்பலம்-1,73,934
5.கொல்வின் ஆ.டி. சில்வா – 58,531
6.வாசுதேவ நாணயக்கார- 17,005
செல்லுபடியான வாக்குகள் – 65,22,147
வெற்றிபெறுவதற்காக 32,61,073 வாக்குகளை பெறவேண்டியிருந்தது.
மாவட்ட ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
1988 இல் நடைபெற்ற 2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தகவல்களை நாளை பார்ப்போம்.
ஆர். சனத்
தகவல் மூலம் – தேர்தல் ஆணைக்குழு.
படங்கள் – இணையத்தளம்.