Latest News
Wednesday, October 9, 2019

இலங்கையின் 5 ஆவது ஜனாதிபதி தேர்தல் - 2005

1999 டிசம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 2ஆவது முறையும் வெற்றிபெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு – 2000 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் திருப்திகரமான வெற்றியை வழங்கவில்லை.
✍️இத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 94 ஆசனங்களைக் கைப்பற்றி 13 போனஸ் ஆசனங்கள் சகிதம் மொத்தமாக 107 ஆசனங்களைப் பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான சாதாரணப்பெரும்பான்மை பலம் (113) இருக்கவில்லை.
 
✍️மறுபுறத்தில் உள்நாட்டுப்போர், பொருளாதார நெருக்கடி, ஆட்சிகவிழ்ப்பு திட்டம் என பல பிரச்சினைகள் தலைதூக்கியதால் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி – ஓராண்டுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் சந்திரிக்கா. இதன்படி 2001 டிசம்பர் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
 
✍️அத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். “சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர்” என தற்போதுபோன்றே அப்போதும் பிரச்சினைகள் உருவாகின.
 
✍️அமைச்சுகள்மீது சந்திரிக்கா கை வைத்தார். முரண்பாடுகள் உச்சம்தொட, பிரதமர் ரணில் வெளிநாடுசென்றிருந்தவேளை நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி – 3 ஆண்டுகளுக்குள் இரண்டாவது தடவையும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
 
✍️இதன்படி 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
 
✍️2004 ஜனவரி 20 ஆம் திகதி சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. (வெற்றிலை சின்னம்) ஜே.வி.பியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.
 
✍️இத்தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
 
சந்திரிக்காவின் தேர்வாக மஹிந்த இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன உட்பட மேலும் சில உறுப்பினர்களே அவரின் மனதில் இருந்தனர். இறுதியில் அதிஷ்டமும், அழுத்தமும் கைகொடுக்க மஹிந்த ராஜபக்ச பிரதமரானார்.
 
✍️இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இலங்கையின் 5 ஆவது ஜனாதிபதி தேர்தல் 2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்றது.
 
✍️அரசியலமைப்பின் பிரகாரம் நபரொருவர் இரண்டு தடவைகளே ஜனாதிபதி பதவியை வகிக்கலாம் என்பதால் சந்திரிக்கா அம்மையார் விலகிநின்றார்.
 
✍️வெற்றிலை சின்னத்தில் மஹிந்த களமிறங்கினார்.
 
✍️2005 செப்டம்பர் 7 ஆம் திகதி 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.13 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
1.மஹிந்த ராஜபக்ச – வெற்றிலை
(ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –
United Peoples Freedom Alliance)
 
2.ரணில் விக்கிரமசிங்க – யானை
(ஐக்கிய தேசியக் கட்சி –
United National Party)
 
3.ஶ்ரீதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி
(ஐக்கிய சோஷலிசக் கட்சி –
United Socialist Party)
 
4. அலேச அசோக சுரவீர – தேங்காய்
(ஜாதிக சங்வர்தன பெரமுன –
Jathika Sangawardhena Peramuna)
 
5.விக்டர் எக்டிகொட –கோப்பை
(எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய –
Eksath Lanka Podujana Pakshaya)
 
6. சாமில் ஜயநெத்தி – மேசை
(புதிய இடதுசாரி முன்னணி – New Left Front)
 
7.அருண டி சொய்சா – கார்
(ருகுனு ஜனதா கட்சி – Motor Car)
 
8.விமல் கீகனகே – துடுப்பாட்ட மட்டை
(ஶ்ரீலங்கா தேசிய முன்னணி – Sri Lanka National Front)
 
9.அருண டி சில்வா – அன்னப்பறவை
(ஐக்கிய லலித் முன்னணி – United Lalith Front)
 
10.அஜித் குமார ஜயவீர ஆராய்சிகே – இரட்டை இலை
(ஜனநாயக ஐக்கிய முன்னணி – Democratic Unity Alliance)
 
11.விஜே டயஸ் – கத்தரிக்கோல்
(சோசலிஷ சமத்துவக் கட்சி – Socialist Equality Party)
 
12.நெல்சன் பெரேரா – பூச்சாடி
(ஶ்ரீலங்கா முற்போக்கு முன்னணி – Sri Lanka Progressive Front)
 
13. சாந்த தர்மத்வாஜா – கடவை (Gate)
(ஐக்கிய தேசிய மாற்று முன்னணி – United National Alternative Front)
 
🏚வாக்களிப்பு நிலையங்கள் – 10748
 
✍️பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 13,327,160
✍️அளிக்கப்பட்ட வாக்குகள் – 9,826,778
✍️நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 109,739
✍️செல்லுப்படியான வாக்குகள் – 9,717,039
 
✍️நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என்ற உறுதிமொழியை 1994 ஆம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையார் வழங்கியிருந்தார். மஹிந்தவும் இதே உறுதிமொழியை வழங்கினார்.
 
✍️ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் அறைகூவல் விடுத்தனர். இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே தமிழ் வாக்குகள் விழுந்தன.அதுவும் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள்.
 
✍️ வடக்கில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 7 இலட்சத்து ஆயிரத்து 938 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் 8 ஆயிரத்து 524 பேர் மட்டுமே வாக்களித்தனர்.( ஈ.பி.டி.பி. மற்றும் மாற்று இன வாக்குகள்)
 
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 18 ஆயிரத்து 728 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 615 பேர் மட்டுமே வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். (சிங்கள, முஸ்லிம் வாக்குகளும் இதில் உள்ளடங்குகின்றன)
 
✍️புலிகளின் இந்த அறிவிப்பு இறுதியில் மஹிந்தவுக்கே சாதகமாக அமைந்தது. தெற்கிலுள்ள சிங்கள, பௌத்த தேசியவாத கட்சிகளும், அமைப்புகளும் மஹிந்த பக்கம் நின்றன. மஹிந்தவிடம் பணம் வாங்கிக்கொண்டே புலிகள் இவ்வாறு செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகூட முன்வைக்கப்பட்டது. ஆனால், இது புலிகளின் தந்திரோபாய நகர்வு என தமிழ் தேசிய ஆதரவாளர்களால் இன்றளவிலும் கூறப்படுகின்றது.
 
✍️ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளாலேயே ரணில் தோல்வியை தழுவினார். புலிகளாலேயே ரணில் மண்கவ்வினார் எனக் கூறப்பட்டது. அதேபோல் ரணில் ஆட்சிக்குவராமல் மஹிந்த வந்ததால்தான் போர் முடிவுக்கு வந்தது. எனவே, அன்று வாக்களிப்பை புறக்கணிக்கும் முடிவை புலிகள் எடுத்தது தவறு என்ற கருத்தும் இருக்கவே செய்கின்றது.
 
✍️மஹிந்த ஜனாதிபதியானதும் பிரதமராக ரட்ணசிறி விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டார்.
 
✍️அதன்பின்னர் ஈழப்போரும் உக்கிரமடைந்தது. போரை முடிப்பதற்காக 2006 இல் தேசிய அரசும் உருவாக்கப்பட்டது. அதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் ஆதரவு வழங்கியது.
 
✍️இறுதியில் 2009 மே மாதம் 19 ஆம் திகதி உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்தது. அதை வைத்தே அடுத்த தேர்தலிலும் மஹிந்த வெற்றிபெற்றார்.
 
✍️ ஜனாதிபதியானதும் காலப்போக்கில் சந்திரிக்காவை மறைமுகமாக மஹிந்த ஓரங்கட்டினார். ராஜபக்சக்களின் அரசியல் எழுச்சிக்கான பயணம் 2005 இல்தான் ஆரம்பமானது.
 
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை வருமாறு,
 
👉✌️மஹிந்த ராஜபக்ச – 4,887,152 (50.29%)
 
👉✌️ரணில் விக்கிரமசிங்க – 4,706,366 (48.43%)
 
👉✌️ஶ்ரீதுங்க ஜயசூரிய -35,425
 
👉✌️அலேச அசோக சுரவீர -31,238
 
👉✌️விக்டர் எக்டிகொட – 14,458
 
👉✌️சாமில் ஜயநெத்தி – 9,296
 
👉✌️அருண டி சொய்சா – 7,685
 
👉✌️அஜித் குமார ஜயவீர ஆராய்சிகே – 5,082
 
👉✌️விஜே டயஸ் – 3,500
 
👉✌️நெல்சன் பெரேரா – 2,525
 
👉✌️சாந்த தர்மத்வாஜா – 1,316 
ஆர் – சனத்
தகவல்மூலம் – தேர்தல் ஆணைக்குழு
பத்திரிகை செய்திகள் –
விக்கிபீடியா- 
  • Like us
  • Comments
Item Reviewed: இலங்கையின் 5 ஆவது ஜனாதிபதி தேர்தல் - 2005 Rating: 5 Reviewed By: pachai thangam