இலங்கையில் பாராளுமன்றமே அதியுயர் சபையாக விளங்குகின்றது. நாட்டை நிர்வகிப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை இயற்றும் சட்டவாக்க சபையாகவும் அது திகழ்கின்றது.
அதுமட்டுமல்ல மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கும், கேள்விகளை எழுப்புவதற்கும், பிரேரணைகளை முன்வைப்பதற்குமான ஜனநாயக களமாகவும் பாராளுமன்றம் பார்க்கப்படுகின்றது.
தமது வாக்குரிமைமூலம் மக்களால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளாக மதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு பல சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
1947 ஆம் ஆண்டு மலையகத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களின் விபரத்தை பார்ப்போம். அன்று தொகுதிவாரியாகவே தேர்தல் நடைபெற்றது.
1. கே.குமாரவேலு – கொட்டகலை தேர்தலை தொகுதி- நுவரெலியா மாவட்டம்.
2. ஜி.ஆர். மேத்தா – மஸ்கெலியா தேர்தல் தொகுதி- நுவரெலியா மாவட்டம்.
3. சௌமியமூர்த்தி தொண்டமான் - நுவரெலியா தேர்தல் தொகுதி – நுவரெலியா மாவட்டம்.
4. சி.வி. வேலுப்பிள்ளை – தலவாக்கலை தேர்தல் தொகுதி- நுவரெலியா மாவட்டம்.
5. கே.வி. நடராஜா- பண்டாரவளை தேர்தல் தொகுதி- பதுளை மாவட்டம்.
6. எஸ்.எம்.வி. சுப்பையா – பதுளை தேர்தல் தொகுதி.
7. கே.ராஜலிங்கம் - நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி- கண்டி மாவட்டம்.
8. டி. ராமானுஜம் - அளுத்நுவர தேர்தல் தொகுதி – கண்டி மாவட்டம்.
1948 ஆம் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் எமது மக்கள் அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டுவரை இந்நிலைமை நீடித்தது.
எமது மக்களின் குரல் திட்டமிட்ட அடிப்படையில் நசுக்கப்பட்டது. மக்கள் பிரிதிநிதித்துவமும், பிரஜாவுரிமையும் இன்மையால் நம்மவர்கள் பட்ட க~;டம் வெறும்வார்த்தைகளால் மட்டும் விபரித்துவிடமுடியாது.
தற்போது விகிதாசாரமுறைப்படியே பொதுத்தேர்தல் நடைபெற்றுவருகின்றது. கடந்த உள்;ராட்சிசபைத் தேர்தல் தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து - ஆர்.எஸ். பிறை
- பச்சை தங்கம்-
- பச்சை தங்கம்-