அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாவலப்பிட்டி நகரின் ஊடான பிரதான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலப்பிட்டி தபால் நிலையத்துக்கு முன்னால் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீர் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, நாவலப்பிட்டி நகரில் மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.