Latest News
Thursday, May 3, 2018

இலங்கை முழுதும்வாழும் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை -2001


மலையகம் என்றதுமே பெரும்பாலானவர்களின் மனத்திரைக்குள் நுவரெலியா, மாத்தளை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களே நினைவுக்கு வரும். மேற்கூறப்பட்ட மாவட்டங்களில்தான் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர்.

ஆனால், இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம் மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கவேண்டும். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களும் எம்மவர்களே என்பதை என்றும் மறந்திடலாகாது.


18 மாவட்டங்களில் வாழும் மலையக தமிழ் மக்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. (ஆண், பெண், குழந்தைகள்).
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணீப்பீட்டை அடிப்படையாகக்கொண்டே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

போர்காரணமாக வடக்கிலுள்ள மாவட்டங்களினதும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வாழும் எம்மவர்களின் தவல்கள் உள்ளடக்கப்படவில்லை. வன்னியில் கூடுதலான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இருக்கின்றனர்.தற்போது எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.


1. கொழும்பு – 24, 821
2. கம்பஹா- 7, 621
3. களுத்துறை- 28, 895
4. கண்டி- 103, 622
5. மாத்தளை- 23, 493
6. நுவரெலியா – 355, 830
7. காலி – 9, 275
8. மாத்தறை – 16, 672
9. அம்பாந்தோட்டை – 424
10. அம்பாறை- 715
11. குருணாகலை – 2, 972
12. புத்தளம் - 2,227
13. அநுராதபுரம் - 443
14. பொலன்னறுவை 194
15. பதுளை – 143, 535
16. மொனறாகலை – 7, 493
17. இரத்தினபுரி – 20,690
18. கேகாலை – 50, 419

மூலம் - தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் - இலங்கை
statistics department of sri lanka

பச்சை தங்கம்
#pachaithangam 
  • Like us
  • Comments
Item Reviewed: இலங்கை முழுதும்வாழும் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை -2001 Rating: 5 Reviewed By: pachai thangam