மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறென்பது இரத்தத்தால் எழுதப்பட்ட காவியம். வலிசுமந்த அவர்களின் வாழ்க்கை பயணத்தை வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரித்துவிடமுடியாது. காடாக காட்சியளித்த மலைநாட்டை எழில்கொஞ்சும் அழகிய பூமியான மாற்றினர். கடின உழைப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு உயிர்கொடுத்து அதை சிலுவைபோல் சுமந்தனர். இருந்தும் எம்மவர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
பிரஜாவுரிமையை பறிக்குமளவுக்கு கொடூரங்கள் கோலோச்சியிருந்தன. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில்கூட எம்மை ஏளனமாக விமர்சிப்பவர்களும், நாம் வளர்ந்துவிடக்கூடாதென நினைப்பவர்களும் வாழத்தான் செய்கின்றனர்.
சதி, கழுத்தறுப்பு, ஒதுக்கப்படுதல், வெட்டு, குத்து என அனைத்து அடக்குமுறை ஆயுதங்களையும் தகத்தெறிந்து நாம் வெற்றிநடைபோட வேண்டும் என்பதே எமது வேட்கையாக இருக்கவேண்டும்.
மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான தமிழ் மொழிமூல காணொளியே இது. முக்கிய சில தகவல்கள் இருக்கின்றன. ஒரு சில தகவல்களை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், ஏனையவை நிதர்சனமாக இருக்கின்றன.