Latest News
Saturday, April 21, 2018

அடுப்புடன் போரிடும் எம் பெண்கள்…! தேசிய உணவான ரொட்டி…!!


“ ஆறுமணியாகுமுன்னே, அடிச்சிடுவான் தப்பு
அரண்டுருண்டு எழுந்திருப்பார் தொழிலாள மக்கள்,
வீறுகொண்ட காண்டாக்கு, விரட்டிடுவாரென்டு
விடியமுன்னே கூடையுடன், பிரட்டுக்களஞ்சென்று
சோறுகறி கண்ணாமல், தோகை மயில் நல்லாள்
சுறு சுறுப்பா தானெழுந்து துண்டு வாங்கச் செல்வாள்
மாறுகொண்ட கங்காணி, கணக்கப்பிள்ளை அய்யா
மணிக்கணக்கைப் பார்த்து விரட்டுவதும் பொய்யா?
தேறுதல் சொல்லிடவோ ஆளொருவரில்லை
சீறுகிறார் துர்ப்பேச்சை, நாள்தோறுந் தொல்லை
ஊறுமொழி கேட்டிவீர், தொழிலாளர் தோழா!
குமரிமுத லிமயம்வரை கொடிப்பிடித்த தமிழா!”



தோட்டத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் நாளாந்த துயர்வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாடல்வரிகளே இவை. சாரல் நாடனின் ‘மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் புத்தகத்தை படிக்கும்போது விழிகளுக்கு தென்பட்டு, விழிநீரை வரவழைத்த வரிகள் இவை.

2011 ஆம் ஆண்டு யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்ட கீழ்வரும் காணொளியும் எம் பெண்களின் துயர்மிகு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றது. ரொட்டி சுடும் காட்சிகள் உட்பட அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல தகவல்கள் இருக்கின்றன. அதனால்தான் இத்துடன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

இக்காணொளியில் முத்துமாரி என்ற தாய் வழங்கிய நேர்காணலின் சுருக்கம்.
“ நாங்கள் இருவரும் உழைத்தால் மாதம் 10 ஆயிரம் ரூபா உழைக்கமுடியும். இதில் 70 சதவீதம் உணவுக்காக செலவாகிவிடும். மீதமுள்ள 3 ஆயிரம் மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு போய்விடும். நாங்கள் ஏழ்மையில் வாழ்கின்றோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை”



  • Like us
  • Comments
Item Reviewed: அடுப்புடன் போரிடும் எம் பெண்கள்…! தேசிய உணவான ரொட்டி…!! Rating: 5 Reviewed By: pachai thangam